News October 19, 2025
நாகை: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- எச்சரிக்கை

மன்னர் வளைகுடா, தெற்கு அந்தமான் மற்றும் அதனியொட்டி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற அக்.21ம் தேதி தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, மேற்கு திசையில் வலுப்பெற கூட வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு சென்றவர்கள் கரைத்திரும்ப வேண்டுமென மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
நாகை: மழை, வெள்ளம் பாதிப்புக்கு இதை தெரிஞ்சிக்கோங்க!

நாகையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், நாகையில் மின்னலுடன் கூடிய பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநில உதவி – 1070, மாவட்ட உதவி – 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் கட்டயாம் உதவும். இதனை Save பண்ணிக்கோங்க.
News October 19, 2025
நாகைக்கு மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது
News October 19, 2025
நாகையில் சாலை மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் வாழக்கரையில் நேற்று(அக்.18) இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் (DPC) TNCSC தாளடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, K.சித்தார்த்தன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினஎ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. இதில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.