News October 19, 2025
செங்கல்பட்டு: நாலாபுறமும் சிதறியோடிய லாரி டயர்கள்!

சேலத்தில் இருந்து சென்னைக்கு, வீடு கட்டுமானத்திற்கு தேவையான மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வாலாஜாபாத் – வண்டலுார் சாலை, படப்பை புது மேம்பாலத்தின் துவக்க பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, லாரி கவிழ்ந்தது. இதில், லாரி பலத்த சேதமடைந்தது டயர்கள் சிதறியோடின. காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதியினர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Similar News
News October 21, 2025
செங்கல்பட்டு: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<
News October 21, 2025
செங்கல்பட்டில் மழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூருக்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.