News April 17, 2024
ஆண்டிபட்டி அருகே ஒருவர் பலி

முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் வீட்டின் அருகே தனி தகர செட்டில் தங்கி இருந்தார். கடந்த 14 ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தடுமாறி கீழே விழுந்து பாறையில் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
தேனி: 10th தகுதி.. ரூ.28,000 சம்பளத்தில் வேலை ரெடி!

தேனி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கு <
News January 12, 2026
தேனி: மன வேதனையில் விஷம் குடித்து தற்கொலை

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக நேற்று முன் தினம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு.
News January 12, 2026
தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.13) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கம்பம், கூடலூர், உத்தமபுரம், துர்கையம்மன் கோயில், ஊத்துக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


