News October 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை பெய்யும் நேரங்களில் மின் கம்பங்களின் அருகில் நிற்பதையோ கீழே கிடக்கும் மின் கம்பிகளின் அருகே செல்வதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும் மற்றும் இடி மின்னல் நேரத்தில் வீட்டில் உள்ள அதிக மின் திறன் கொண்ட மின்சார உபகரண பொருட்களை அனைத்து வைக்கும் வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் சிக்கிய 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி, லாலிக்கல் தொழிற்சாலையில் காவலாளிகளைத் தாக்கி, துப்பாக்கி மற்றும் காப்பர் ஒயர்களைக் கொள்ளையடித்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல், மாணிக்கம், முனிராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொம்மாண்டப்பள்ளி அருகே வாகனத் தணிக்கையில் பிடிபட்ட அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கார் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News March 11, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான இணைய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இணையதளங்களில் உள்நுழையும் போது ‘Keep me logged in’ அல்லது ‘Remember me’ போன்ற வசதிகளை குறிப்பாக பொது கணினிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்தால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.


