News October 19, 2025
பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்

நடிகர் அஜ்மல் அமீருக்கு எதிராக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் பல பெண்களுடன் பாலியல் ரீதியாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் ஐடியில் இதுதொடர்பான பல ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.
Similar News
News March 15, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 15, 2026
திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேறும்: EPS

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் இருந்தாலும், அவற்றிடம் வலிமை இல்லை என EPS தெரிவித்துள்ளார். அதுவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு நிறைந்தவை என்றும், அவை நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியால் சில கட்சிகள் வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
News March 15, 2026
SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா தோல்வி

*மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஃபைனலில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது *சர்வதேச உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் 8.21 மீ நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார் *இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில், யூகி பாம்ப்ரி-கோரன்சன் இணை தோல்வி *ISL கால்பந்தில் பெங்களூரு-மோகன் பகான் இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.


