News October 19, 2025
ஈரோடு அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

ஈரோடு, பவானி அருகே கேசரிமங்கலம் பிரிவு பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பவானி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 19, 2025
ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 19, 2025
ஈரோடு: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News October 19, 2025
ஈரோடு: கனமழை காரணமாக தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவது கொடிவேரி அணைக்கட்டு ஆகும் தற்பொழுது அதிகப்படியான வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் பாதுகாப்பு கருதி நீர்வளத்து துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் குளிப்பதற்கும், படகு சவாரி செல்வதற்கும், மீன்பிடிப்பதற்கு இன்று ஒரு நாள் தடை விதித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.