News October 19, 2025
புதுகை: குளத்தில் மூழ்கி பரிதாப பலி

அன்னவாசல் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளியான இவர் இன்று மாங்குடி குவாரியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது எதிர் பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் சக்திவேலின் உடலை மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர
Similar News
News October 21, 2025
புதுகை: பைக் மோதி முதியவர் பரிதாப பலி!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி (70). இவர் அக்.19 தனது பைக்கில் பொன்னமராவதிக்கு சென்றுள்ளார். அப்போது கேசராபட்டி அருகே, பெட்ரோல் போடுவதற்காக பைக்கை திருப்பிய நிலையில், உலகம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஒட்டிவந்த பைக், எதிர்பாராதவிதமாக, மணி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
News October 21, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க, நேற்று முன்தினம் ஆங்காங்கே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து சென்று சோதனை நடத்தினர். இதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 350-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News October 21, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!