News October 19, 2025

சென்னை: மாடியில் விழுந்த நபர் உயிரிழப்பு

image

சென்னை, நரியன்காட்டைச் சேர்ந்தவர் ஜான்சேவியர் (21). இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்துள்ளனர். நேற்று மாணவியை சந்திக்க சென்ற போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 19, 2025

கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு

image

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் காய்கறி, பழம், பூக்கள் வரத்து நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பணிபுரியும் இந்த சந்தையில், அந்நாளில் வர்த்தகம் நடைபெறாது.

News October 19, 2025

சென்னையில் நிவாரண மையங்கள் அதிகரிப்பு

image

சென்னை, அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், கிரேட்டர் சென்னை மாநகராட்சி நிவாரண மையங்களை 116 லிருந்து 215 ஆக உயர்த்தியுள்ளது. மின்தடை ஏற்படாத வகையில் அனைத்து மையங்களிலும் ஜென்செட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாய்கள், போர்வைகள், கொசு சுருள்கள், உணவு வசதி மற்றும் 106 சமையல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

News October 19, 2025

சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!