News October 19, 2025
திருச்சி: பாஜக நிர்வாகி மீது பெண் புகார்

பாஜக மாநில ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் சிவகுமார் திருச்சி தில்லைநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் மஞ்சுளா என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அந்நிறுவனத்தில் இருந்து 8 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதற்கு மஞ்சுளா தான் காரணம் என கூறி, சிவகுமார் தன்னை அடித்து துன்புறுத்தியதாக மஞ்சுளா நேற்று திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
Similar News
News October 21, 2025
திருச்சி: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

சேலத்திலிருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி வந்த தனியார் பேருந்து வாத்தலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, தொடர் மழையின் காரணமாக வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
News October 21, 2025
திருச்சி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News October 21, 2025
திருச்சி: நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை செல்வதற்கு வசதியாக நெல்லையில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை (அக்.22) இரவு 11:55 மணிக்கு நெல்லையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணப்பாறை, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக சென்னை சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.