News October 19, 2025
அம்பானியின் ₹1,000 கோடி விமானத்தின் கிளிக்ஸ்

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்களில், கடந்த 2024-ல், போயிங் 737 MAX 9 பிரைவேட் ஜெட் இணைந்தது. ₹1,000 கோடி மதிப்பிலான இந்த ஜெட், ஆடம்பரத்திற்கும் பிரமாண்டத்திற்கும் பெயர் பெற்றது. பெட்ரூம், பொழுதுபோக்கு அம்சங்கள் என பல வசதிகள் அதில் உள்ளன. அந்த விமானத்தின் புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.
Similar News
News March 19, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு நாளை முதல் 3 நாள்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT
News March 19, 2026
தொடரும் இழுபறி.. மதுரை புறப்பட்டாரா புதுவை CM?

புதுச்சேரி NDA கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், ரங்கசாமியை சந்திக்க ம.அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுவை சென்றுள்ளார். ஆனால், இதை தவிர்க்கும் நோக்கில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு CM புறப்பட்டு விட்டாராம். தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலிலும் சாமி தரிசனம் செய்யவுள்ளாராம். NDA கூட்டணியில் தொடர விருப்பம் இல்லை என்பதை பாஜகவுக்கு CM சூசகமாக உணர்த்துவதாக NR காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 19, 2026
CINEMA 360: கொக்கி குமாரு மீண்டும் வரான்!

‘புதுப்பேட்டை 2’ ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்து விட்டதாக செல்வராகவன் பதிவிட்டுள்ளார் *‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களை தொடர்ந்து VZ துரை இயக்கத்தில் சுந்தர்.சி மீண்டும் நடிக்கவுள்ளார் *சென்சார் பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், ‘துரந்தர் 2’ படம் தமிழில் நாளை வெளியாகிறது *மணிரத்னம் படத்திற்கான வேலைகளை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கியுள்ளாராம். முன்னதாக, இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்பட்டது.


