News October 19, 2025
அக்டோபர் 19: வரலாற்றில் இன்று

* 1888 – நாமக்கல் கவிஞர் பிறந்தநாள். *1910 – நோபல் பரிசு பெற்ற தமிழர் சுப்ரமணியன் சந்திரசேகர் பிறந்தநாள். *1943 – காச நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது *1953 – நடிகர் மதன் பாப் பிறந்தநாள். *1956 – நடிகர், பேச்சாளர் ஞானசம்பந்தன் பிறந்தநாள். *1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. *2006 – நடிகை ஸ்ரீவித்யா இறந்தநாள். *2023 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இறந்தநாள்.
Similar News
News October 19, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

தீபாவளிக்கு பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான பணிகளை தீவிரப்படுத்த தவெக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி முடிந்ததும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, அவரது பரப்புரை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News October 19, 2025
மதியத்திற்கு மேல்… வந்தது புதிய எச்சரிக்கை

30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, திருப்பூர், கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 19, 2025
Women’s WC: இந்திய அணி பவுலிங்

மகளிர் உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்யவுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இப்போட்டியில் வெல்வது அவசியமாகும். நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு 3-வது அணியாக முன்னேறும். இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதில் ரேணுகா சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.