News October 19, 2025

போலி வெள்ளியை கண்டுபிடிப்பது எப்படி?

image

*வெள்ளிக்கு அதிக வெப்பம் கடத்தும் திறன் உள்ளது. எனவே அதனருகில் ஐஸ் கட்டியை வைத்த உடனே உருகும். *வெள்ளியின் அருகே காந்தத்தை வைத்தால் ஈர்க்காது. போலி வெள்ளி ஈர்க்கும். *வெள்ளியில் 925 அல்லது BIS ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். *925 என இருந்தால், அதில் 92.5% தூய வெள்ளி இருக்கிறது என்று பொருள். 999 என இருந்தால், அதில் 99.9% தூய வெள்ளி இருக்கும்.

Similar News

News March 21, 2026

ஒரு கிலோ விலை ₹10,000… எது தெரியுமா?

image

விலை உயர்ந்த நட்ஸ் என்றால் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவை தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் சில்கோசா என்ற பைன் விதைகள் தான் விலை உயர்ந்த நட்ஸாக உள்ளது. ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் இந்த நட்ஸ் ஒரு கிலோ ₹7,000 – ₹10,000 வரை விற்பனையாகிறது. இமாச்சல் & ஜம்மு காஷ்மீரின் உயரமான மலை பகுதிகளில் மட்டுமே கிடைப்பதும், அதன் செறிவான சத்துகளும் தான் இது காஸ்ட்லியாக இருப்பதற்கு காரணம்.

News March 21, 2026

பனை தொழிலாளர்களா, பயங்கரவாதிகளா? சீமான்

image

கள் இறக்கிய பனை தொழிலாளர்களை பயங்கரவாதிகள் போல உள்ளாடையுடன் திருச்சி போலீஸார் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மை என சீமான் கண்டித்துள்ளார். கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் நச்சு கலந்த கள் என போலீஸ் கூறுவதில் இருந்தே முற்றிலும் இது புனையப்பட்ட நாடகம் என்பது உறுதியாகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கள் இறக்க தடை இல்லாதபோது, TN-ல் மட்டும் தடை எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 21, 2026

பொதுத்தேர்வு.. பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், திங்கள் முதல் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது. *தேர்வர்களின் முகப்புத் தாள்கள் முதன்மை விடைத்தாள்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை தேர்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும். *சொல்வதை எழுதுபவர் நியமனங்களில் அன்றைய தேர்வு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. *அறை கண்காணிப்பாளராக 10-ம் வகுப்பு ஆசிரியர்களை நியமிக்க கூடாது.

error: Content is protected !!