News October 19, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News March 14, 2026

இருள் சூழ்து காணும் தஞ்சை பெரிய கோயில் கோபுரம்

image

தஞ்சை பெரிய கோயில் கோபுர கலசத்தில் உச்சியில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக தஞ்சையின் எந்த ஒரு பகுதியும் இருந்தாலும் கோபுர கலசத்தை பார்க்க முடியும். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விமான கோபுரத்தின் உச்சியில் உள்ள விளக்கு எரியவில்லை. இதனால் கோயிலில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே விளக்கை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 14, 2026

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் பாபு. கொத்தனாரான இவர் வீட்டு வாசலில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பெரிய கேரம் போர்டு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

News March 14, 2026

தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!