News October 19, 2025
குமரி: பள்ளி மாணவிகள் விண்ணப்பியுங்க

குமரி ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 7 விடுதிகள் உள்ளன. இதில் அழகப்பபுரம் சமூக நீதி விடுதியில் 33 காலியிடங்கள் உள்ளன. தகுதி உடைய மாணவிகள் விடுதிகாப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் இருந்து பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 21, 2025
குமரி: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

குமரி மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு <
News October 21, 2025
குமரி: சேட்டிலைட் போனில் பேசிய ஆட்சியர்

ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பயன்படுத்தபடும் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ராஜேஷ்குமார் எம்எல்ஏ வள்ளவிளை பங்கு தந்தை , மீனவர் குடும்பத்தினரை வள்ளவிளையில் நேரில் சந்தித்து செயற்கைக்கோள் தொலைபேசி ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை பேசி உறுதி செய்தனர்.மீனவர்கள் இக்கட்டான சூழலிலும் தெரியபடுத்த வாய்ப்பு உள்ளது.
News October 21, 2025
காங்கிரஸ் எம்எல்ஏ சொந்தம் கொண்டாடுவது வேடிக்கை – பாஜக

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதியமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், தொலைத் தொடர்பு துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு குமரி மீனவர்களின் சேட்டிலைட் போன் ரீசார்ஜ் வசதியை செய்து கொடுத்துள்ளார். இதில் எதிலும் சம்பந்தம் இல்லாத ராஜேஷ்குமார் எம்எல்ஏ தனது முயற்சியால் நடந்ததாக சொந்தம் கொண்டாட நினைப்பது வேடிக்கையாக உள்ளது என குமரி பாஜக தலைவர் கோபகுமார் தெரிவித்துள்ளார்.