News April 17, 2024
வேலூர் எஸ்பி வெளியிட்ட முக்கிய தகவல்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1307 வாக்குச்சாவடி மையங்களில் 2268 காவல்துறை, பாதுகாப்புப்படை மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான 179 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பிற்குத் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட உள்ளதாக எஸ்பி மணிவண்ணன் நேற்று (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
வேலூர்: தொழிலாளி தற்கொலை – போலீசார் விசாரணை!

கே.வி.குப்பம் தாலுகா நீலகண்டபாளையம் கிராமத்தை சேர்ந்த மகாதேவனின் மகன் பெருமாள் (40), கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று வீட்டுக்கு வந்த பெருமாள் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 7, 2025
வேலூரில் 2,350 மாணவர்கள் திறனாய்வு தேர்வு எழுதினர்!

வேலூர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வுகள் நேற்று நடந்தது. 11 மையங்களில் நடந்த இந்த தேர்வை எழுத 2,470 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2,350 பேர் எழுதினர். 120 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வையொட்டி முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 7, 2025
வேலூர்: 9 வயது சிறுமி வன்கொடுமை.. 60 வயது முதியவர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ்(60) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து பின்னர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


