News October 19, 2025
சென்னை: இரவு ரோந்து பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (18.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News October 19, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
சென்னை: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த <
News October 19, 2025
6,15,992 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
நேற்று (அக்.18) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,834 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,926 பேருந்துகள் மூலம் 2,56,152 பயணிகள் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.