News October 19, 2025

திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் ஒப்படைப்பு

image

திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வாகனங்கள், மொபைல் போன்கள் திருடு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர நடவடிக்கைகளின் அடிப்படையில் வாகனங்கள், திருடு போன 37 பவுன் தங்க நகைகள், மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு இன்று அந்தந்த உரிமையாளர்களிடம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கினார்.

Similar News

News October 19, 2025

திருச்சி மாவட்டத்தில் 58.8 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.18) இரவு மழை பெய்தது. இதில் துறையூர் சட்டமன்றத் தொகுதி தென்பறநாடு பகுதியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 58.8 மில்லி மீட்டரும், சராசரியாக 2.45 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 19, 2025

திருச்சி: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

திருச்சி மாவட்டத்தில் 72 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

திருச்சி: மாங்காய் விற்ற முதியவர் மீது மோதிய அரசு பஸ்

image

திருச்சி இருங்களூர் கைகாட்டியில் சாலையோரம் நேற்று மாலை மாங்காய் விற்றுக்கொண்டிருந்த திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவருக்கு கால் எலும்பு முறிந்த நிலையில், அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!