News October 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News March 12, 2026
பழிதீர்க்காமல் விடமாட்டோம்: ஈரான் கடும் எச்சரிக்கை

ஹார்மோஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். உச்ச தலைவராக பதவி ஏற்ற பின் அவர் வெளியிடும் முதல் அறிக்கை இதுதான். அதில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடந்து தாக்குதல் நடத்தப்படும் எனவும், பள்ளி குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
News March 12, 2026
சிலிண்டர் காலியாவதை இப்படி கண்டுபிடிங்க

TN-ல் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாட்டு உள்ளதோ என்ற அச்சத்தில் பலரும் அவசர அவசரமாக கேஸ் புக் செய்கின்றனர். அதற்கு முன்பாக சிலிண்டரில், இன்னும் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை அறிய எளிய வழி உள்ளது. ஈரமான துணியை சிலிண்டரில் மேல் இருந்து கீழ் நோக்கி துடைக்கவும். இப்போது, ஈரம் காயாமல் உள்ள பகுதிவரை சிலிண்டருக்குள் கேஸ் இருப்பதாக அர்த்தம். எனவே, நாள்களை கணக்கிட்டு கேஸ் புக் செய்யுங்கள்.
News March 12, 2026
ஜனநாயகன் சென்சார்.. கொந்தளித்த செங்கோட்டையன்

ஜனநாயகன் சென்சாரில் பல வேடிக்கையான விஷயங்கள் நடப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். படத்தை முடக்குவதற்காக சென்சாரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறுகிறார்கள்; அப்படியென்றால் குழுவில் மீதம் உள்ள நால்வர் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார். இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக சாடிய அவர், எதிர்காலத்தில் ஜனநாயகத்தை காக்கப் போவது விஜய் தான் எனவும் கூறினார்.


