News October 19, 2025
அப்பாவு பேரவை மரபுகளை மீறுகிறார்: அன்புமணி

புதிய சட்டமன்ற குழு நிர்வாகிகளை ஏற்க சபாநாயகர் அப்பாவு மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். 24 உறுப்பினர்களை (மொத்த உறுப்பினர்களில் 10%) கொண்ட கட்சிகளை மட்டுமே பேரவையில் அங்கீகரிக்க முடியும் என்று, அரசியலுக்கு ஏற்ப விதிகளை மாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்வதற்கு மட்டுமே 10% உறுப்பினர்கள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News October 19, 2025
₹5,000.. அறிவித்தது தமிழக அரசு

வடகிழக்கு பருவமழை 2 நாளுக்கு முன் தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ₹5,000 வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
மதியம் வரை மழை வெளுக்கும்

பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், தென்காசி, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை இடியுடன் கூடிய மழை வெளுக்கும் என IMD எச்சரித்துள்ளது. எனவே, தீபாவளி பர்சேஸ் செய்ய நினைத்தால், மதியத்திற்கு மேல் செல்லுங்கள்.
News October 19, 2025
மில்லியன் கணக்கான உயிரை காப்பாத்திருக்கேன்: டிரம்ப்

ஒவ்வொருமுறை போரை நிறுத்தும்போதும் அடுத்த போரை நிறுத்தினால் நோபல் பரிசு தருவார்கள் என தன்னிடம் பலர் சொல்வதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுவரை 8 போரை நிறுத்தி, மில்லியன் கணக்கான உயிர்களைக் காத்திருக்கிறோம் என்ற அவர், ஆனால் தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஏதோ ஒரு பெண்ணுக்கு நோபல் பரிசு கொடுத்ததாகவும், அவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் அருமையானவர் எனவும் கூறியுள்ளார்.