News October 19, 2025
புதுச்சேரி: மாநில காங்கிரஸ் தலைவரின் தீபாவளி வாழ்த்து

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தீபாவளி வாழ்த்து செய்தியில். தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா, தெய்வீகத்தின் ஆதரவு மற்றும் வெற்றியை குறிக்கும் விழா. தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் ஒரு பண்டிகையும் ஆகும். இல்லத்தில் விளக்குகள் ஏற்றி ஒளியை பரப்புவதை போல், நம் உள்ளத்திலும் தீய எண்ணங்கள் கொண்ட இருளை அகற்ற அறம் என்ற ஒளியை ஏற்றுவோம் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
புதுவை: தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு துறை எச்சரிக்கை

புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அலுவவலர் இளங்கோ நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி பண்டிகையில் உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை வெடிக்கும்போது குழந்தைகள் பருத்தியாடைகள் மற்றும் காலணிகளை அணிந்திருப்பது பாதுகாப்பானது. மேலும் குடிசைப்பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
புதுவை: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

புதுவை, வில்லியனூர் கணுவாபேட்டை சேர்ந்தவர் சதாம்உசேன்(24). கட்டிட தொழிலாளியான இவர் நஜ்மல்ஆலம்(35), என்பவர் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 19, 2025
புதுச்சேரி: தீபாவளி முன்னிட்டு ரூ.1000 போனஸ்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் நலிவடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1,000 நிதியுதவியை புதுச்சேரி அரசு வழங்குகிறது. இதற்காக அரசுக்கு மொத்தம் ரூ.13.16 கோடி செலவாகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் இராமகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.