News October 18, 2025

தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

image

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 19, 2025

திமுகவில் இணைந்தனர்

image

அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மாற்றுக்கட்சிகளில் முக்கிய முகமாக இருப்பவர்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

News October 19, 2025

3 நாள்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

image

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 6,15,992 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News October 19, 2025

அடுத்த மதுரை மேயர் யார்?

image

மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அப்பதவிக்கான ரேஸில் 5 பேர் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 79 – வது வார்டு கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, 32 வது வார்டு விஜய மௌசுமி, ரோஹினி, வாசுகி சசிகுமார் ஆகியோர் பெயரை தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!