News October 18, 2025
தங்கம் முதலீடு அல்ல, காப்பீடு: ஸ்ரீதர் வேம்பு

தங்கம் வாங்குவது முதலீடு அல்ல, அது தான் ஒருவரின் Insurance என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையின் நிலையற்றத்தன்மையால், வேகமாக ஏறும் மதிப்புகள் திடீரென முழுவதுமாக சரிய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 2008 நிதி நெருக்கடி போல மீண்டும் வரலாம் என்று எச்சரித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நிதி அபாயத்தில் இருந்து காக்கும் காப்பீடு தங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 19, 2025
FLASH: இந்திய அணி பேட்டிங்

முதல் ODI-யில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ODI-ல் முதல் முறை கேப்டனாக சுப்மன் கில் அணியை வழிநடத்தவுள்ளார். இந்திய அணி: கில், ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இந்த மேட்ச்சில் இந்தியா வெற்றி பெறுமா?
News October 19, 2025
BREAKING: விலை சரசரவென மாறியது

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றது. தீபாவளி பண்டிகையையொட்டி முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில், ஒரு முட்டை 10 காசு உயர்ந்து ₹5.25-க்கும், சென்னையில் ₹5.90-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், கறிக்கோழி உயிருடன் விலை மாற்றமின்றி Kg ₹100-க்கும் விற்பனையாகிறது.
News October 19, 2025
திமுகவால் செய்யமுடியாததை EPS செய்துகாட்டினார்

தமிழக நலன் குறித்து அக்கறையில்லாமல் மத்திய அரசுடன் பகைமை பாராட்டுகிறது திமுக என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சொத்துவரி, மின் கட்டண உயா்வு குறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசு நிதி தராததே காரணம் என தமிழக அரசு சொல்கிறது என்றார். மேலும், ஊரக வேலை உறுதி திட்ட நிதியை தமிழகத்துக்கு திமுகவால் பெற முடியவில்லை எனவும், தனிநபராக டெல்லிக்கு சென்று EPS இதை செய்துமுடித்தார் எனவும் அவர் கூறினார்.