News October 18, 2025

Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

image

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.

Similar News

News March 21, 2026

தெலுங்கில் தவெக பரப்புரை ஸ்டார்ட்!

image

புதுச்சேரியின் தெலுங்கு பிராந்தியமான ஏனாமில் தவெக தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. தோட்டா ராஜு என்பவரை அந்த தொகுதியின் வேட்பாளராக களமிறக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, டாடா ஏஸ் வாகனத்தில் தெலுங்கு வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் தோட்டா ராஜு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தெலுங்கர்கள் அதிகமுள்ள தொகுதியில் தவெக தடம் பதிக்குமா?

News March 21, 2026

BREAKING: பாஜகவில் இருந்து சரத்குமார் விலகலா.. பரபரப்பு

image

பாஜகவில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து சரத்குமார் விலக இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருந்தது. இந்த விவகாரம் பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், கட்சியில் தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை எனக் கூறுவது முற்றிலும் தவறானது எனவும், ஆதரவாளர்களுடனான நாளைய ஆலோசனை கூட்டம் வழக்கமான ஒன்றுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 21, 2026

RCB-க்கு இன்னொரு கோப்பை உறுதி: அஸ்வின்

image

நடப்பு சாம்பியனான RCB அணி தங்களுடைய காம்பினேஷனில் உள்ள போதாமைகளை சரிசெய்த விதம் மிக சிறப்பாக உள்ளது என அஸ்வின் பாராட்டியுள்ளார். IPL தொடரை வெல்வது அவ்வளவு எளிதல்ல; ஆனால், டீம் காம்பினேஷனும் பொருத்தமான மாற்று வீரர்களும் RCB-க்கு பலம்கூட்டுகிறார்கள் என கூறியுள்ளார். இந்த அணியை வைத்து RCB அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் ஒரு கோப்பையை வெல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!