News October 18, 2025
நீலகிரி: நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, சுப்பிரமணிய கவுசிக் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்துவது குறித்து நவ. 21ம் தேதிக்குள் நிறுவனங்களுடன் கலந்தலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
நீலகிரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News October 19, 2025
நீலகிரி: கனமழை காரணமாக ரத்து அறிவிப்பு

குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். ஹில் குரோவ், ரன்னிமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகளில் தண்டவாளத்தின் மீது மண் சரிந்துள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி சேவை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. குன்னூர் உதகை மலை ரயில் சேவை வழக்கம்போல் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
News October 19, 2025
நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நீலகிரி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!