News October 18, 2025
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் இன்று மண்டலம் இரண்டு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பஸ் ஏற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 19, 2025
திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கே.ஜி.கே நகரை சேர்ந்தவர் முருகன் (57). ஒன்றிய அலுவலக உதவியாளர். இந்நிலையில் நேற்று முன்தினம் மொபட்டில் முருகன் சென்றுள்ளார். அப்போது முத்தூர் சாலையில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு வேன் முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 19, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 18.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, அவிநாசி, தாராபுரம், பல்லடம், காங்கயம் இந்த பகுதியில் ஏதாவது குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News October 19, 2025
திருப்பூர் இரவு ரோந்து பணிகள் போலீசார்

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கே வி ஆர் நகர் சரக உதவி ஆணையர் கணேசன் தலைமையில், இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர் குறித்த விபரம் சமூக வலைதளங்களில் மாநகர போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.