News October 18, 2025
தீபாவளி விடுமுறை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் 1,353 அவசர கால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால், நான்கே நிமிடத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
BREAKING: 11 பேர் அதிரடி நீக்கம்

அண்ணா பல்கலை.,யில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நேற்று அண்ணா பல்கலை.,யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இவர்கள் 11 பேரும் பேராசிரியர்களாக தொடர்வார்கள் எனவும் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக உயர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
News October 19, 2025
கார் விபத்தில் சிக்கினார் Ex CM

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உத்தராகண்ட் Ex CM ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியது. நேற்று (அக்.18) இரவு 7.30 மணிக்கு ஹரிஷின் கார் கரோலி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது காரின் குறுக்கே அடையாளம் தெரியாத நபர் ஒரு வந்துள்ளார். இதனால் Sudden Brake அடிக்க, கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இவ்விபத்தில் இருந்து ஹரிஷ் ராவத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்
News October 19, 2025
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறினால்.. திருமா

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறினால் இதை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு நேர் எதிராக இருக்கும் ஒரே கட்சி என்றால், அது விசிகதான் எனக் கூறினார். மேலும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதற்கு விசிக முக்கிய காரணம். இதை உடைக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விசிக செயல்படுவதுபோல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.