News October 18, 2025
தேர்வு கிடையாது.. மத்திய அரசில் 2,623 வேலை அறிவிப்பு

ONGC நிறுவனத்தில் 2,623 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ, டிகிரி. வயது வரம்பு: 18 – 24 (தளர்வுகளும் உண்டு). உதவித்தொகை: ITI முடித்தவர்களுக்கு ₹10,560, டிப்ளமோ தகுதிக்கு ₹10,900, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,300. தேர்வு முறை: கல்வித்தகுதியின் அடிப்படையில். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News October 19, 2025
பட்டாசு வெடிக்கும்போது இதையெல்லாம் செய்யாதீங்க

நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. *பட்டாசுகளை வாயில் வைத்தோ (அ) கையில் வைத்தோ வெடிக்கக்கூடாது. *மின்கம்பங்கள் அருகே வெடிக்க வேண்டாம். *வாகனத்திற்கு மேல் (அ) உள்புறம் வைத்து வெடிப்பது ஆபத்து. *பட்டாசு வெடிக்கும்போது அருகே சானிடைசர் வைத்திருக்க வேண்டாம். *தீப்பெட்டிக்கு பதிலாக அகர்பத்தி, மெழுகுவர்த்திகளை பயன்படுத்தி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்.
News October 19, 2025
ஏமாற்றிய ரோஹித்!

14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் அவுட்டாகி ஏமாற்றி இருக்கிறார். ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ரென்ஷாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 13/1 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கில் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
News October 19, 2025
முடிவுக்கு வந்தது AFG-PAK போர்!

ஒரு வாரமாக நடந்து வந்த ஆப்கன் – பாக் போர் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கன் பதிலடி கொடுக்கப்படும் என கூறியதால், நிலைமை கைமீறி போய்விடக்கூடாது என்பதற்காக கத்தார் & துருக்கி மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், போர் முடிவுக்கு வந்துள்ளது.