News October 18, 2025
இந்த அண்ணன மறந்துடாதீங்க..

அப்பா வேற வெள்ளனே கறி வாங்கிட்டாரு, அம்மாவும் வடை சுட்டுட்டு, இட்லி அவிக்க ஆரம்பிச்சிட்டாங்க, நான் வேற உடம்பு முழுக்க எண்ணெய் தேய்ச்சிட்டேன், வேகமா சட்டைய கொடுங்க என்று டெய்லர் கடை வாசலில் வாழ்வில் ஒரு முறையாவது நின்றிருப்போம். இன்றோ ரெடிமேட் துணிகளுக்கு 90% பேர் திரும்பிய நிலையில், டெய்லர்களுக்கு கிடைப்பதோ கிழிந்த துணிகளை தைக்கும் வேலை மட்டுமே. கடைசியாக எப்போது சட்டையை தைத்து அணிந்தீர்கள்?
Similar News
News March 18, 2026
காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லதாம். மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 18, 2026
வரலாற்றில் இன்று

➤1662 – உலகின் முதல் பேருந்து சேவை பிரான்ஸில் தொடங்கியது. ➤1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி 6 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ➤1965 – சோவியத் வீரர் அலெக்சி லியோனொவ், விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். ➤ 1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.
News March 18, 2026
தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக மழை பெய்வதையும் பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல் நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றூம் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


