News October 18, 2025

தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 19, 2025

தஞ்சை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

image

தேப்பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 50). தச்சு தொழிலாளியான இவர் நேற்று மதியம் ஆட்டுக்கு இலை பறிக்க அந்த பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி மரத்திலிருந்து இலையை பறித்துள்ளார். அப்போது உயர் மின்னழுத்த கம்பியில் மரத்திலிருந்து வெட்டிய இலை விழுந்தது. அதை எடுக்கும் போது ராமு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News October 19, 2025

தஞ்சை: நடுரோட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு

image

ஒரத்தநாடு பி.எட். கல்லூரி அருகே கடைத்தெருவில் தீபாவளி பொருட்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிய தமிழ்ச்செல்வி என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்த தமிழ்ச்செல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 19, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!