News April 17, 2024
இது தான் தமிழ் மொழி மீது காட்டும் அக்கறையா?

தமிழ் மொழி மீது பாசம் இருப்பது போல் பிரதமர் மோடி வேஷம் போடுகிறாரென மஜக தலைவர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார். தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.74 கோடி ஒதுக்கிய மோடி, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,487 கோடி ஒதுக்கியுள்ளார். இது தான் தமிழ் மீது மோடி காட்டும் அக்கறையா என வினவியுள்ளார்.
Similar News
News November 10, 2025
தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்… தொடர் சோகம்

சமீப காலமாக தமிழ் திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. குறுகிய காலத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் பிரிந்துவிட்டனர். தமிழ் சினிமா இவர்களை என்றும் நினைவில் வைத்திருக்கும். இவர்களது நகைச்சுவை, இசை, திரைப்படங்கள் ஆகியவை எப்போதும் நம் இதயங்களில் உயிர் வாழும். யாரெல்லாம் மறைந்தனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News November 10, 2025
டெல்லி கார் வெடிப்பு: அமித்ஷாவிடம் PM ஆலோசனை

தலைநகர் டெல்லியில் நடத்த கார் வெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிவிபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், PM மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே கார் வெடிவிபத்து குறித்து டெல்லி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
News November 10, 2025
கர்ப்பிணிகள் செய்யவே கூடாத தவறுகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் செய்யும் சில தவறுகள் தாயையும், சேயையும் பாதிக்கலாம். ➤காபி, டீ அதிகமாக அருந்த வேண்டாம் ➤டாக்டரை கேட்காமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் ➤அதிக நேரம் நிற்காதீர்கள் ➤எதிர்மறையான விஷயங்களை யோசிக்கவோ, பேசவோ கூடாது ➤ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.


