News October 18, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (அக்.18) திருப்பத்தூர் மாவட்ட வாகன ஓட்டிகளுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அனுமதிக்காத ராங் சைடு திசையில் ஓட்டுவதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு செய்வதால் வாகன விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்காக பலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் அறிக்கை விட்டுள்ளனர்.

Similar News

News December 13, 2025

திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <>க்ளிக் செய்யுங்கள்<<>>. அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

திருப்பத்தூர் மாணவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பத்தூரில் அரசு/ அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை தேர்வு 2025-26 (NMMS) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இத்தேர்வு வரும் ஜனவரி 10 தேதி நடைபெற உள்ளது. மேலும், தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, வருடம் 12 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

திருப்பத்தூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.<<>>udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!