News October 18, 2025
ஆற்றங்கரையோர மங்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வீடூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படுவதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளான மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், நோணாங்குப்பம் ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News October 19, 2025
புதுச்சேரி: தீபாவளி முன்னிட்டு ரூ.1000 போனஸ்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் நலிவடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1,000 நிதியுதவியை புதுச்சேரி அரசு வழங்குகிறது. இதற்காக அரசுக்கு மொத்தம் ரூ.13.16 கோடி செலவாகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் இராமகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.
News October 19, 2025
புதுச்சேரி ஆளுநர் தீபாவளி வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ஒளிமயமான தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை, சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.
News October 19, 2025
புதுச்சேரி: மாநில காங்கிரஸ் தலைவரின் தீபாவளி வாழ்த்து

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தீபாவளி வாழ்த்து செய்தியில். தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா, தெய்வீகத்தின் ஆதரவு மற்றும் வெற்றியை குறிக்கும் விழா. தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் ஒரு பண்டிகையும் ஆகும். இல்லத்தில் விளக்குகள் ஏற்றி ஒளியை பரப்புவதை போல், நம் உள்ளத்திலும் தீய எண்ணங்கள் கொண்ட இருளை அகற்ற அறம் என்ற ஒளியை ஏற்றுவோம் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.