News April 17, 2024

கடவுள் ராமர் பூமியில் அவதரித்த புண்ணிய நாள்!

image

விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் ராமரின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் ராவ நவமியாக கொண்டாடப்படுகிறது. திரேதா யுகத்தில் சைத்ர சுக்ல நவமி அன்று ராமர் பிறந்தார். ராமரின் முன்னோர்கள் சூரியக்குல வழித்தோன்றல்கள் என்பதால் சூரியனை வழிபடுவதில் இருந்து ராம நவமி கொண்டாட்டம் தொடங்குகிறது. ராவ நவமியை ஒட்டி, அயோத்தியில் உள்ள பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஏற்றப்படவுள்ளது.

Similar News

News April 30, 2025

ALERT: தினமும் இதை சாப்பிடுகிறீர்களா?

image

கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.

News April 30, 2025

2 அறை கொடுப்பேன்: VJD காட்டம்

image

டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.

News April 30, 2025

ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

image

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.

error: Content is protected !!