News October 18, 2025
மதுரை : தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும்.
SHARE பண்ணுங்க.
Similar News
News October 18, 2025
BREAKING: மதுரைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை 62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
மதுரை: தெரு நாய்களைக் கொன்றவர்களை தேடும் போலீசார்

மதுரை விலங்குகள் நல பிரதிநிதி முருகேஸ்வரி எஸ்.எஸ். காலனி போலீசில் இன்று கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது : எஸ்.எஸ். காலனியில், தெரு நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர். அந்த நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்து, அவைகளை கொன்ற கொலையாளிகள் மீது உரிய எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்
காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 18, 2025
மதுரை அருகே லாரி மோதி கொடூர விபத்து

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி அருகே மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி பழங்களை ஏற்றி சென்ற வேன் முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ஓட்டுனர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.