News October 18, 2025
நெல்லை: தீபாவளி ஒட்டி 1600 போலீசார் பாதுகாப்பு – எஸ்பி

தீபாவளிக்காக ஏஎஸ்பி டிஎஸ்பிக்கள் தலைமையில் 1600 போலீசார் மாவட்டம் முழுவதும் பணியில் உள்ளனர். அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்களில் 24 மணி
நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். 53 இடங்களில் வாகன சோதனைகள் மூலம் சந்தேகமான நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
தீபாவளி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பான முறையில் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழவும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.
News October 19, 2025
நெல்லை ஐடிஐ பார்வையற்றோர் மாணவர் சேர்க்கை

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: நெல்லை பேட்டை ஐ டி ஐ யில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தொழிற்பயிற்சியில் அக்டோபர் 31ம் தேதி வரை நேரடியாக சேரலாம் பயிற்சி கட்டணம் கிடையாது. மாதம் 250 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச மிதிவண்டி சீருடைகள் வரைபட கருவிகள் வழங்கப்படும்.
News October 18, 2025
நெல்லை: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

நெல்லை இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <