News October 18, 2025
புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுரை

“பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைக்கலாம்; வெடித்த பட்டாசு, எரிந்த கம்பி மத்தாப்புகள் ஆகியவற்றின் மீது தண்ணீரை ஊற்றி நனைத்து தனியே சேகரிப்பதன் மூலம் தீக்காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்; பாதுகாப்பும், சுற்றுச்சூழல் அக்கறையுடன் கூடிய தீபாவளி கொண்டாட்டம் உங்கள் குடும்பத்துக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.” என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 19, 2025
புதுச்சேரி ஆளுநர் தீபாவளி வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ஒளிமயமான தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை, சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.
News October 19, 2025
புதுச்சேரி: மாநில காங்கிரஸ் தலைவரின் தீபாவளி வாழ்த்து

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தீபாவளி வாழ்த்து செய்தியில். தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா, தெய்வீகத்தின் ஆதரவு மற்றும் வெற்றியை குறிக்கும் விழா. தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் ஒரு பண்டிகையும் ஆகும். இல்லத்தில் விளக்குகள் ஏற்றி ஒளியை பரப்புவதை போல், நம் உள்ளத்திலும் தீய எண்ணங்கள் கொண்ட இருளை அகற்ற அறம் என்ற ஒளியை ஏற்றுவோம் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தீபாவளி வாழ்த்து

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என தனியிடம் உண்டு, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி அள்ளித்தரும் திருநாள் தீபாவளி சாதி, மதம், இனம், மொழி என்ற பேதமின்றி, சமத்துவத்தின் அடையாளமாக தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.