News April 17, 2024
ராகுல், அகிலேஷ் இன்று கூட்டாக பிரசாரம்

உ.பி.,யின் காசியாபாத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். உ.பி.,யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. I.N.D.I.A கூட்டணியின் முக்கிய தலைவர்கள் இருவரும் கூட்டாக பிரசாரம் செய்வது மேற்கு உ.பி.யில் உள்ள 13 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துமென காங்கிரஸ் நம்புகிறது.
Similar News
News February 16, 2026
தமிழ்நாட்டின் தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

TN-ல் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23-ம் தேதி வெளியாகும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து, வரும் 26-ல் <<19152692>>CEC ஞானேஷ் குமார்<<>> தமிழகம் வந்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு, இம்மாத இறுதியில் (அ) மார்ச் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை ECI அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெடியா இருங்க வாக்காளர்களே!
News February 16, 2026
தவெக சார்பில் நயினார் மீது புகார்!

விஜய் – த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நயினார் நாகேந்திரன் மீது தவெக வழக்கறிஞர் கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்துள்ளார். நயினார் பேசியதை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்த நிலையில், த்ரிஷா இன்று கண்டன அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நயினார், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாா். இந்நிலையில் தவெக சார்பில் நயினார் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
News February 16, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?


