News October 18, 2025
ராமநாதபுரத்தில் கல்வி கடன் மேளா தேதி அறிவிப்பு

உயர்கல்விக்கான கல்விக் கடன் மேளா முகாம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அக். 22 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. உயர்கல்விக்கு சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்கள் ஆதார், பான், கல்விச்சான்று, சேர்க்கைக்கடிதம், கட்டணவிவரம், வருமானச் சான்று, வங்கி கணக்கு, சாதிச்சான்று போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். பிரதமர் வித்யாலெட்சுமி திட்டத்தின் கீழ் கடன் பெறும் முறைகள் விளக்கப்பட உள்ளன.
Similar News
News December 8, 2025
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை நீட்டிப்பு எச்சரிக்கை

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்றி மற்றும் மன்னார் வளைகுடா காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிச-12-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப் படுகிறது. தற்போது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது.
News December 8, 2025
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 2025-2026 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வியில் சேர்த்துள்ளவர்கள் கல்வி உதவித்தொகை அதிகளவில் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலத்தை நேரிலோ (அ) தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.