News October 18, 2025
2 நாளில் 3.59 லட்சம் பேர் பயணம்!

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் தீபாவளிப் பண்டிகை முன்னெச்சரிக்கை செயல்பாட்டில், 16-17 அக்டோபர் 2025க்குள் இயக்கப்பட்ட 6,920 பேருந்துகளில் சுமார் 3,59,840 பயணிகள் பயணம் செய்தனர். இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்.
Similar News
News December 8, 2025
இன்டிகோ – 71 விமானங்கள் ரத்து, பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் இன்டிகோ விமான சேவைகள் இன்று ஐந்தாவது நாளாக 71 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதில் வருகை விமானங்கள் 33, புறப்பாடு விமானங்கள் 38 ரத்து செய்யப்பட்டன. கவுகாத்தி, டில்லி, மும்பை, பூனா, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர், அகமதாபாத், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகை விமானங்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ச்சியான ரத்தால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
News December 8, 2025
சென்னை: தண்ணீர் தகராறில் நாயை ஏவி விட்ட கொடூரம்!

திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 3வது தெருவைச் சேர்ந்த தமிழ்வாணன் (59), நேற்று இரவு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த எழில் (38) தகராறில் ஈடுபட்டு, தனது நாயை ஏவி தமிழ்வாணனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மெரினா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
சென்னை: ரயிலில் முக்கிய பொருளை மிஸ் பண்ணிடீங்களா?

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் Rail Madad <


