News October 18, 2025

விஜய் உடன் கூட்டணியா? முக்கிய ஆலோசனை

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறார். NDA-வில் இருந்து அவர் விலகிய பின்னர், விஜய் உடன் கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, TVK கூட்டணி தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினாராம். மேலும், ஜன.7-ல் மதுரை மாநாட்டிற்கு முன்னதாக கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Similar News

News October 19, 2025

பிஹாரில் NDA-வின் கேம் சேஞ்சர் இவரா?

image

பிஹார் தேர்தலில், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி NDA-வின் கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது HAM(S) கட்சிக்கு 2% வாக்கு வங்கி. ஆனாலும், பிஹாரில் 20% உள்ள மஹாதலித் சமூகத்தினர் மற்றும் மகத் பிராந்தியத்தில் இவருக்கு செல்வாக்கு மிக அதிகம். கடந்த தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்பட்டதால், இவரது ஆதரவு NDA-க்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

News October 18, 2025

உலகின் டாப் 5 விலையுயர்ந்த மதுபானங்கள்

image

ஒவ்வொரு பொருளும், அதன் விலைக்கேற்றார் போலான தரத்தில் இருக்கும். அதுபோல் தான் மதுவும். மதுவை ரசித்து ருசித்து சுவைப்போர் என்றால் வெகு சிலரே. இந்நிலையில், உலகிலேயே சுவைமிக்க, அதேசமயம் அதிக விலையுடைய மது வகைகளை மேலே swipe செய்து பாருங்கள். இருப்பினும், மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

News October 18, 2025

தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

image

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!