News October 18, 2025
இலவச மின்சாதன பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி

சித்தோடு அடுத்த வாசவி கல்லூரி அருகில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் மின்சாதன பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி அக்டோபர் 27 முதல் நவம்பர் 29 வரை வழங்கப்பட உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 8778323213, 7200650604 ஆகிய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
Similar News
News October 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
ஈரோடு அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

ஈரோடு, பெருந்துறையை அடுத்த வீரச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (67). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முந்தினம் பாலக்கரை அருகில் கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
ஈரோடு: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <