News October 18, 2025
நாமக்கல் மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!
Similar News
News October 19, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
நாமக்கல்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

நாமக்கல் மாவட்டத்தில், 20-10-2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டும் நெறிமுறையைப், பின்பற்றி பாதுகாப்பான முறையில் விபத்து மற்றும் மாசற்ற ஒலி குறைந்த பட்டாசுகளை பயன்படுத்துமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 18, 2025
நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் அரசு தரப்பில் மரியாதை!

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லம் உள்ளது இந்த நினைவு இல்லம் நூலகமாக செயல்பட்டு வருகிறது. அக்டோபர்-19ஆம் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கவிஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் துர்கா மூர்த்தி பங்கேற்கின்றனர்.