News April 17, 2024
திமுகவில் ஐக்கியம்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக – ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதற்கிடையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
Similar News
News August 15, 2025
இல.கணேசன் கடந்து வந்த பாதை

தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட <<17417276>>இல.கணேசன்<<>>, தமிழ்நாட்டில் பாஜகவையும், தாமரை சின்னத்தையும் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு சென்றவர். தனது வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே RSS-ல் இணைந்தார். 80 வயதில் காலமான அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. பாஜகவில் தேசிய, மாநில உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவில் இருந்தாலும், திமுக, அதிமுக கட்சிகளுடன் நட்புறவை பேணியவர். #RIP
News August 15, 2025
தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு? கனிமொழி சாடல்

TN-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய கவர்னரை கனிமொழி MP சாடியுள்ளார். NCRB அறிக்கையின் படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் BJP ஆளும் உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதல் 3 இடங்களை பிடித்துள்ளதாகவும், இதில் 10 இடங்களுக்குள் கூட வராத TN மீது பழி போடுவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு என்றும் சாடியுள்ளார்.
News August 15, 2025
BREAKING: கவர்னர் இல.கணேசன் காலமானார்

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன்(80) காலமானார். வீட்டில் மயங்கி விழுந்ததால் சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவராக இருந்த இல. கணேசன், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னர் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.