News October 18, 2025
பவன் கல்யாணை இயக்கும் லோகேஷ்?

‘ஜனநாயகன்’, யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ படங்களை தயாரிக்கும் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக பவன் கல்யாணை ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். அந்த பட்டியலில் லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் ஆகியோர் இருக்கிறார்களாம். இவர்கள் இருவரில் யாராவது ஒருவர்தான் பவன் கல்யாண் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 8, 2025
தி.மலை: ரயிலில் முக்கிய பொருளை மிஸ் பண்ணிடீங்களா?

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் Rail Madad மொபைல் <
News December 8, 2025
அமைச்சர் மீது CM நடவடிக்கை எடுக்கணும்: அண்ணாமலை

அமைச்சர் நேரு மேலும் ₹1020 கோடி மோசடி செய்திருப்பதாக <<18501393>>ED கூறியிருப்பது<<>> அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவில் பல ஊழல்கள் நடந்திருப்பது ஆதாரங்களோடு அம்பலமாகியிருப்பதாக கூறிய அவர், இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் துறைகளே சிறப்பாக செயல்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மினிஸ்டர் மீது CM உடனடியாக FIR பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 8, 2025
SIR விவகாரம்: பார்லி.,யில் விவாதத்திற்கு வருகிறது

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து மக்களவையில் நாளை விவாதம் தொடங்கவுள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.


