News April 17, 2024
இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டியில் வெல்வது யாரென்பது ஜூன் 4இல் தெரியும்.
Similar News
News January 20, 2026
சென்னை வந்தடைந்தார் விஜய்!

2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய் நள்ளிரவு சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்தார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அவருடன் தவெக நிர்வாகிகளான நிர்மல் குமார் உள்ளிட்டோரும் வந்தனர்.
News January 20, 2026
உடல் எடையை குறைக்க யூடியூப் டிப்ஸ்.. மாணவி உயிரிழப்பு

மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து, உடல் எடையை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார். கடந்த 17-ம் தேதி நாட்டு மருந்து சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுள்ளார். மீண்டும் 18-ம் தேதி வாந்தி, மயக்கம் ஏற்பட, ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 20, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 20, தை 6 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


