News October 18, 2025
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியாது போலவே!

தீபாவளி நாளான அக்.20-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், அன்றைய தினம் இந்த மாவட்டங்களில் பட்டாசு வெடிப்பது கஷ்டம் தான். உங்கள் ஊரில் மழை பெய்யுதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 19, 2025
International Roundup: காஸாவில் 11 பேரை கொன்ற இஸ்ரேல்

*டிரம்ப்பின் குடியுரிமை, பாதுகாப்பு கொள்கைகளை எதிர்த்து பல நாடுகளில் போராட்டம். *பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் தனது பட்டத்தை துறந்தார். *பாகிஸ்தான் – ஆப்கன் இடையே கத்தாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை. *காஸாவில் 11 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. *இயற்பியல் பரிசு பெற்ற சீன விஞ்ஞானி சென் நிங் யாங் காலமானார். *ஸ்வீடனில் சர்வதேச யூத திரைப்பட விழா திரையிட யாரும் முன்வராததால் ரத்து.
News October 19, 2025
தேர்வுக்குழுவுக்கு செமத்தியான ரிப்ளே கொடுத்த ஷமி

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் இடம்பெறாத விரக்தியில் இருந்த ஷமி, தேர்வுக்குழுவிற்கு செமத்தியான மெசேஜ் ஒன்றை தனது பவுலிங் மூலம் தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் உத்தரகாண்டிற்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும், ஷமிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
News October 19, 2025
ரொமான்ஸ் செய்வதற்கு மட்டும் தான் நடிகைகளா?

இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டுமே படம் எடுப்பதாக நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை போன்ற நடிகைகளை ரொமான்ஸ் செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்வதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்யும் நிலைப்பாட்டை இயக்குநர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.