News October 18, 2025

மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி மாணவர் பலி

image

செம்பனார்கோயில், சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன் மகன் நவீன் குமார் (18). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக தனது சட்டையை இஸ்திரி செய்தபோது இஸ்திரி பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

Similar News

News October 18, 2025

மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

மயிலாடுதுறை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov<<>>.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

மயிலாடுதுறை: ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கலெக்டர்

image

சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News October 18, 2025

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல் சிறப்பு பருவ பயிருக்கு காப்பீட்டை நவம்பர் 15-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது www.pmfby.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!