News October 18, 2025

புதுகை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணமேல்குடி சரக விஏஓ அளித்த புகாரின் பேரில் மணமேல்குடி காவல் துறையினர் இறந்த முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணமேல்குடி போலீஸ் சார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 19, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 18, 2025

புதுகை: ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் இன்று நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (அக்.,18) துவக்கி வைத்து பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

News October 18, 2025

புதுகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!