News October 18, 2025
பிஹார் தேர்தலில் சறுக்கும் பாஜக.. பின்னணி என்ன?

பிஹாரில் காங்., கூட்டணியின் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்டுள்ளார். NDA-வில் CM யார் என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என அமித்ஷா கூறியுள்ளார். தேர்தல் பிரசார கூட்டங்களில் இவ்விவகாரத்தை கையில் எடுத்து RJD, காங்., தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜகவின் பிடியில் நிதிஷ் சிக்கியுள்ளதாகவும், அவருக்கு மரியாதை இல்லை எனவும் RJD சாடியுள்ளது. இது NDA-வுக்கு சற்று சறுக்கலாக பார்க்கப்படுகிறது.
Similar News
News October 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 19, ஐப்பசி 2 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: திரையோதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். மாத சிவராத்திரி. நரக சதுர்த்தசி ஸ்நானம். ▶வழிபாடு: சிவபெருமானுக்கு வில்மாலை சாத்தி வழிபடுதல்.
News October 19, 2025
இந்தியா – USA வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை என்ன?

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடந்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். காலக்கெடு நிர்ணயித்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்களின் நலன்களை காக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News October 19, 2025
ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது?

சரியான நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். அதேபோல், லடாக் மக்களின் கோரிக்கைகளுக்கும் சரியான தீர்வு வழங்கப்படும் எனவும், அதற்கு மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாக அம்மாநில CM உமர் அப்துல்லா தெரிவித்து இருந்தார்.