News October 18, 2025
திண்டுக்கல் பிரபல ரவுடி கூட்டாளி திடீர் மரணம்..!

மதுரையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரை கடத்தி வழக்கில் கைதாகி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 7, 2025
திண்டுக்கல் 22,000 வாக்காளர்கள் நீக்கம்?

அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தையொட்டி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் ‘ஆப்சென்ட்’ எனக்கூறி 6,000 பேர், இறந்தவர்கள் எனக்கூறி 16,000 பேர் என மொத்தம் 22,000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினேன் என தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (06.12.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.